Re: நோய்களுக்கு முக்கிய காரணம் மேற்கத்திய கொழுப்புசசத்து நிறைந்த உணவுகளே - ஆராய்ச்சி முடிவுகள்
Tuesday, August 3, 2010
நோய்களுக்கு முக்கிய காரணம் மேற்கத்திய கொழுப்புசசத்து நிறைந்த உணவுகளே - ஆராய்ச்சி முடிவுகள்
" ஜங் புட் " என்றழைக்கப்படும் நொறுக்குத் தீனிகளும் மேற்குலக நாடுகளில் அதிகமாக உண்ணப்படும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளுமே பல நோய்களுக்கும் முக்கிய காரணம் என்ற ஆராய்ச்சி முடிவுகளை நேற்று வெளியிட்டனர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள்.
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் அதிக சிகப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை கலக்கப்படுவதாகவும், இது மனிதனின் குடலில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆஸ்துமா போன்ற பல ஒவ்வாமை நோய்கள் உண்டாகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக ஒவ்வாமை நோய்களினால் அதிகப்படியானோர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதும் இந்த ஆய்வு முடிவுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுப்புறச் சூழலும் , தூசியுமே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். தொழிற்சாலைகள் அதிகளவில் இருப்பதால் இதை கட்டுப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள
து
0 comments:
Post a Comment