Re: உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்வோர் பட்டியல்: ஜப்பானிய பெண்கள், கத்தார் ஆண்கள் முதலிடம்
Tuesday, August 3, 2010
உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்வோர் பட்டியல்: ஜப்பானிய பெண்கள், கத்தார் ஆண்கள் முதலிடம்
உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்வோர் பட்டியல்: ஜப்பானிய பெண்கள், கத்தார் ஆண்கள் முதலிடம்
உலகிலேயே ஜப்பானிய பெண்கள் தான் அதிக வாழ்நாளை கொண்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக ஜப்பான் இந்த தொடர் சாதனையை தன் வசம் வைத்துள்ளது. ஆண்களில், கத்தார் நாட்டு ஆண்களை அதிக ஆயுள் கொண்டவர்களாக உள்ளனர். உலகில் உள்ள மக்களில் அதிக வாழ்நாளை கொண்ட
பெண்கள் ஜப்பானியர்கள் தான் என்றும், அவர்கள் 86.44 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜப்பானிய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் உள்ள மக்களில் நீண்ட காலம் வாழ்பவர்கள் ஜப்பானியர்கள் தான். கடந்த 25 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்த சாதனையை செய்து வருகின்றனர். உலகளவில் ஜப்பானிய பெண்கள் தான் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றனர். 86.1 ஆண்டுகள் வாழும் ஹாங்காங் பெண்கள் உலகில் 2ம் இடமும், 84.5 ஆண்டுகள் வாழும் பிரான்ஸ் பெண்கள் 3ம் இடமும், 84.4 ஆண்டுகள் வாழும் சுவிசர்லாந்து பெண்கள் 4வது இடமும் பெறுகின்றனர். கத்தார் நாட்டு ஆண்கள் 81 ஆண்டுகள் வாழ்கின்றனர். ஆண்களில், இவர்கள் தான் உலகில் அதிக ஆயுள் கொண்டவர்கள், ஹாங்காங் ஆண்கள் 79.8 ஆண்டுகளும், ஐஸ்லாந்து மற்றும் சுவிசர்லாந்து நாட்டு ஆண்டுகள் 79.7 ஆண்டுகளும் வாழ்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மருத்துவ வசதி காரணமாக கேன்சர், இதய பாதிப்பு, வலிப்பு ஆகிய மூன்று நோய்களால் இறப்பு விகிதம் குறைந்து, ஜப்பான் நாட்டினரின் ஆயுள் அதிகரித்து விட்டது. சிறந்த உணவு, உயர்ந்த வாழ்க்கை தரம் ஆகியவையும் அவர்களின் ஆயுள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணங்கள். ஆனால், "நீண்ட ஆயுள் பெறுவது நல்லது தான். ஆனால், குறைவான குழந்தை பிறப்பு விகிதம் இருக்கும் போது பெரியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்கள் தொகையில் ஏற்ற தாழ்வையே ஏற்படுத்தும்' என்று சமூகவியலார் சிலர் கருத்து கூறியுள்ளனர்
0 comments:
Post a Comment