Powered by Blogger.

இந்தியா – Google செய்திகள்

Re: தசை நார்களும் நீரிழிவு நோயும்!

Thursday, June 17, 2010



 
 
 
மருத்துவ செய்தி
தசை நார்களும் நீரிழிவு நோயும்!!
 
சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று. பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.

நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.

தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.

நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்

தசைப்பிடிப்பு 
கால், கை வலி 
கெண்டைக் கால் வலி 
குடைச்சல் 
உடல் வலி
 
ஆகியவை ஏற்படும்.

இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும். இவற்றைச் சரிசெய்ய:

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
தினமும் நடைப்பயிற்சி அவசியம். 
கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.

நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி? நடைப் பயிற்சியை எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் "நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும். ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.

அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது 
அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது. 
அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது? 
நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும், 
முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள். 
1 வாரம் இது போல் செய்யவும். 
அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.

நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.

நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.

பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.

பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.

அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.

பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன? கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.

இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:

மிதமான நடை- 5 நிமிடம், 
கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம் 
அதிவேக நடை –1 நிமிடம் 
20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.

மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.

நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!


0 comments:

Post a Comment

CRICKET CURRENT NEWS

CRICKET INFO LATEST PHOTO WIDGETS

  © Blogger template dev by Ourblogtemplates.com 2009

Back to TOP